நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகளின் இருக்கைகள் உடைந்து கிடப்பதாக பாளையங்கோட்டையை சேர்ந்த சிவசண்முகவேல், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக இருக்கைகள் சரிசெய்யப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்..