சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே போடிநாய்க்கன்பட்டி ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை வளர்ந்து படர்ந்து ஆக்கிரமித்துள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் ஏரி நீர் மாசடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஏரியை தூர்வாரி ஏரி நீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்து, போடிநாய்க்கன்பட்டி, சேலம்.