நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளை இரண்டாக பிரித்து மல்லசமுத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பிரிவும், ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்னொரு பிரிவும் பத்திரம் பதிவு செய்யும் முறைதான் இதுநாள் வரை நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி வெண்ணந்தூரில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் அமைத்து வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளை ஒரே இடத்தில் பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், வெண்ணந்தூர், நாமக்கல்.