நோய் பரவும் அபாயம்

Update: 2022-08-16 17:22 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வரலாற்று புகழ் வாய்ந்த நைனாமலை கோவில் அமைந்துள்ளது. அதன் அடிவாரத்தில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்பவர்கள் குரங்குகளுக்கு அழுகிப்போன பழங்களை தின்பதற்காக போட்டு செல்கின்றனர். அவற்றை சாப்பிடும் குரங்குகளுக்கு நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு் ஏற்பட்டு வருகிறது. எனவே அவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மனோகரன், மின்னம்பள்ளி, நாமக்கல்.

மேலும் செய்திகள்