அழகப்பபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருத்துவமனைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஒரு புறத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், முறையாக பராமரிக்காததால் ஓடை மூடப்பட்டு விட்டது. இதனால், மழைநேரங்களில் தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஓடையை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மைக்கிள் பாபுஜி, அழகப்பபுரம்.