மதுப்பிரியர்களால் பெண்கள் அச்சம்

Update: 2022-08-16 15:08 GMT

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி பெரிய ஏரியின் கரையில் விளாங்குடி-சாத்தான்குடிகாடு செல்லும் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் இந்த தார்சாலையோரம் அமர்ந்து மது அருந்தும் மதுப்பிரியர்கள் காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் கவர்களையும் இந்த ஏரியில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சும்போது இந்த காலி பாட்டில்கள் விவசாய நிலத்தில் அடித்துச் சென்று உழவு பணியின்போது பாட்டில்கள் உடைந்து கண்ணாடி துண்டுகள் விவசாய தொழிலாளர்களின் காலில் காயத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதுப்பிரியர்கள் மது போதையில் சாலையின் ஓரத்திலேயே படுத்துக்கொள்வதினால் இரவு நேரத்தில் இந்த வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்