பொதுமக்கள் அச்சம்

Update: 2022-08-16 14:55 GMT

தோவாளை தாலூகாவுக்கு உட்பட்ட பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் அருகில் ரேஷன் கடை உள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த கடையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த கடையின் வளாகத்தில் செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. பகல் நேரங்கிளிலேயே பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே வந்து வந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடையின் வளாகத்தில் உள்ள புதர்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.நாராயணசாமி,பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்