மூடப்படாத பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-08-16 14:15 GMT

கரூர் வெங்கமேடு பிள்ளையார் கோவில் அருகே சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் உடைந்ததால் அதனை சரி செய்ய பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்தும் இந்த பள்ளம் இன்னும் மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக  செல்லும் பொதுமக்கள் இந்த பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்