பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பாடாலூர், திருவிளக்குறிச்சி, இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், மருதடி, விஜயகோபாலபுரம், நாட்டார்மங்கலம், கூத்தனூர் கிராம பொதுமக்கள், பொதுமருத்துவ சிகிச்சை, கர்ப்பிணிகள் சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை பெற்று வருகின்றனர். . நாட்டார்மங்கலத்தில் இருந்து பாடாலூர் சுகாதார நிலையத்திற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு இருப்பதால் பொதுமக்கள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு செல்வதற்கு சிரமமாக இருக்கிறது. எனவே நாட்டார்மங்கலத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் சிகிச்சைபெற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.