பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுடுகாடு பராமரிப்பின்றியும், மயான கொட்டகை இன்றியும் காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு வரும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மயான கொட்டகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.