சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-08-16 13:26 GMT


திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுகா கொரடாச்சேரி ஒன்றியம் மணக்கால் ஊராட்சி மக்கள் பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் தொட்டி சேதமடைந்து கான்கிரிட் கம்பிகள் பெயர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மணக்கால்.

மேலும் செய்திகள்