ரிஷிவந்தியம் அருகே மேல் புதூர் வடக்கு தெருவில் இருந்த கைப்பம்பை அகற்றாமல் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த வித பயன்பாடும் இன்றி நடுரோட்டில் உள்ள கைப்பம்பால், அங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், அந்த கைப்பம்பின் மீது மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த கைப்பம்பை அகற்றுவது அவசியமாகும்.