சூலூர் தாலுகா செஞ்சேரிமலை அருகே சின்னமலை கிராமத்தில் பி.ஏ.பி. கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இறைச்சி கழிவுகளை மர்ம ஆசாமிகள் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே அங்கு இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.