கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு புதிதாக சமுதாய கூடம் அமைக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த சமுதாய கூடம் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். சமுதாய கூடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.