அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உஜ்ஜினி காலனி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்கு பொது கழிப்பறை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.