நவக்கிரகங்களில் புகழ்பெற்ற சுக்கிரன் ஸ்தலமாக கஞ்சனூர் விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பக்தர்களுக்கு என்று கழிவறை வசதி கிடையாது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மற்றும் பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள், கஞ்சனூர்