கோத்தகிரி மார்க்கெட் பிரதான நுழைவு வாயில் மற்றும் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள நுழைவு வாயில்களில் வியாபாரிகள் பொருட்களை வைத்து, கேட்டை முழுமையாக திறக்க முடியாத வகையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் எளிதாக நடந்து சென்று பொருட்களை வாங்க சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே நுழைவு வாயில் மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.