பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை திருவிழந்தூர் காவிரிக்கரை நாலுகால் மண்டபம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அந்த பகுதியில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்..மேலும் அந்த பகுதியில் பஸ் நிறுத்தம் பயனற்ற நிலையில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பயணிகள் நிழற்குடையில் சமூக விரோதிகள் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிழந்தூர், மயிலாடுதுறை.