மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சாலையின் ஓரத்தில் செல்லும் வடிகால் வாய்க்காலில் கழிவு நீர் கலந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூம்புகார் சாலையின் ஓரத்தில் உள்ள வடிகால் வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் , மயிலாடுதுறை.