பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-08-15 12:08 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மொய் விருந்து, திருமணம், காதணி விழா பதாகைகள், அரசியல் பதாகைகள் வைத்ததால் பிரச்சினைகள் ஏற்பட்டதால் அதன் பிறகு பதாகைகள் வைக்க தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பஸ் நிலையம் பகுதியில் வரிசையாக ஆபத்தான நிலையில் பதாகைகள் வைக்க தொடங்கியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆபத்துகளை ஏற்படுத்தும் பதாகைகள் வைப்பதை பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

மேலும் செய்திகள்