வடமதுரையை அடுத்த முத்தனம்கோட்டை கிழக்கு பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து வருகிறது. தொட்டியை தாங்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மேல்நிலை குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் அபாயம் உள்ளது. எனவே சீரமைப்பு பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.