சிக்னல் விளக்குகள் சரிசெய்யப்படுமா?

Update: 2022-08-14 16:17 GMT

சேலம் இரும்பாலை ரோட்டில் புது ரோடு பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து நான்கு சாலைகள் பிரிகிறது. இதனால் அங்கு சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. அந்த சிக்னல் விளக்குகள் பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து சிக்னல் விளக்கை சரி செய்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும்.

-குருபாலன், மஜ்ராகொல்லப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்