வெண்ணாற்றின் கரையில் படித்துரை கட்டப்படுமா?

Update: 2022-08-14 16:16 GMT



கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம், புனவாசல் அரசு பள்ளி அருகாமையில் உள்ள, வெண்ணாற்றின் கரையில் மண் தரையில் இறங்கி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் குளிக்கின்றனர், ஆடைகள் துவைக்கின்றனர் ஆனால், அந்த இடம் கரடுமுரடான பள்ளமான நிலையில் இருந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மக்கள் செளகரியமாக இறங்கி குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் ஏற்ற வகையில் படித்துரை கட்டப்படுமா?

பொது மக்கள், புனவாசல், வடபாதிமங்கலம்.

மேலும் செய்திகள்