சென்னை கீழ் அயனம்பாக்கம் பொன்னியம்மன் நகர் பகுதியில் இருக்கும் சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி இல்லாமல் ஆபத்தாக காட்சி தருகிறது. பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் வாகனங்கள் , மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பலரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு பாதாள சாக்கடைக்கு மூடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.