பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜீவாநகர் அருகில் சாட்டுபுதூர் குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், குளத்தை முறையாக பராமரிக்காததால் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.