கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள அரச மரத்தடியில் மதுபிரியர்கள் மது குடித்து வருகின்றனர். போதை தலைக்கேறியதும் அவர்கள் அந்த வழியாக செல்லும் பெண்களிடம் வீன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.