சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த எம்.ஜி.ஆர். காலனி மகாத்மா காந்தி வீதியில் 100 வீடுகள் உள்ளன. ஆனால் 50 வீடுகளுக்கு மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற வீ்டுகளுக்கு காவிரி குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் அங்கு சாக்கடை கால்வாய், சாலை போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர முன்வரவேண்டும்.
-ராஜமாணிக்கம், தாரமங்கலம், சேலம்.