மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் பஸ் நிலையத்திற்கு வருபவா்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனா். இதனால் அந்த வழியாக செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.. இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறாகவும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேணடும்.