பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-13 14:54 GMT

பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூரில் உள்ள, லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில், வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள, பயணியர் நிழலகம் சாலையை விட மிகவும் பள்ளமாக உள்ளது. இதனால், மழை பெய்யும் போது பயணியர் நிழலகம் உள்ளே மழை தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால், பயணிகள் மழை தண்ணீரிலேயே நீண்ட நேரம் நிற்கவேண்டிய நிலை உள்ளது. அதனால், பயணிகள் நலன் கருதி மழை தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பஸ் நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள், , கூத்தாநல்லூர்.

மேலும் செய்திகள்