திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நல்ல மாங்குடியிலிருந்து கம்மங்குடி வழியாக நெம்மேலி வரை தார் சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் குப்பம் ,சோத்திரியம், கம்மங்குடி ,வடகுடி,நெம்மேலி,கல்லுக்குடி .கிராம மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நன்னிலம் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணிசேகரன். கந்தர்வகோட்டை.