நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் மலைக்கோட்டையின் உச்சியில் உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறி நின்று செல்பி எடுப்பது, விளையாடுவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. மேலும் சில இளைஞர்கள் மதுபோதையில் மலைக்கோட்டைக்கு செல்கின்றனர். இதனால் குடும்பத்துடன் செல்பவர்கள் முகம் சுளிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே இதை தவிர்க்க மலைக்கோட்டைக்கு செல்பவர்களை போலீசார் கண்காணித்து கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.