நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயா் பலகை வைத்து மின்விளக்குகளால் தெரிவித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த பெயர் பலகையில் உள்ள மின்விளக்குகள் பழுதானதால், பெயர் பலகை பயனற்று காணப்படுகிறது. எனவே அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பெயர் பலகையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?