தெரு நாய்கள் தொல்லை

Update: 2022-08-13 11:22 GMT

அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ரோட்டில் சுற்றி திரிகின்றன. திடீரென நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு ரோட்டில் பாய்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகிறார்கள். சில நேரங்களில் நடந்து செல்பவர்களை கடிக்க பாய்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்