சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரில் கிராம சேவை மையகட்டிடம் உள்ளது. இந்தகட்டிடம் கடந்த பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் கட்டிடம் சேதம் அடைந்து வருவதால் அரசு பணம் வீணாகி வருகிறது. எனவே கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.