திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் அமைந்துள்ள ஆண்களுக்கான கழிப்பிடம் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அதிக துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பொத்திக்கொண்டு தான் இயற்கை உபாதை கழிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும் பெண்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் கள ஆய்வு மேற்கொண்டு கழிப்பிடத்தை பராமரிக்கவும், பெண்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தியும் தர வேண்டும்.