கிருஷ்ணகிரி நகரில் ஐந்து ரோடு ரவுண்டானா அருகிலும், ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலும் சிக்னல் விளக்குகள் உள்ளன . இதைத் தவிர நகருக்குள் மற்ற பகுதிகளில் சிக்னல் விளக்குகள் இல்லை. குறிப்பாக சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் சந்திக்கக்கூடிய ஆவின் மேம்பாலம் அருகில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் நகரில் பெங்களூரு சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் நான்கு சாலைகள் சந்திக்கக்கூடிய இடம் உள்ளது. அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அந்த இரண்டு இடங்களிலும் சிக்னல் விளக்குகள் அமைத்தால் விபத்துகளை தடுக்கலாம். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தர்னீஸ், கிருஷ்ணகிரி.
-தர்னீஸ், கிருஷ்ணகிரி.