சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் இருந்து கொண்டப்பநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் பச்சபிள்ளை தெரு ரைட்டர் தோட்டம் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை மழைநீர் வடிகால் வசதி செய்து தரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைக்காலம் தொடங்குவதற்குள் உடனடியாக மழைநீர் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்.
-ஆனந்தன், சேலம்.