செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை பகுதியில் உள்ள பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் எதிரே பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பெண்கள் மற்றும் முதியவர்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே பொது மக்களின் நலன் கருதி மேற்கூறிய பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.