அந்தியூர்-கோபி சத்தி சாலையில் புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ் பயணிகள் இருக்கை இல்லை. இதனால் பயணிகள், பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்து நிற்கும் நிலை உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்த நிழற்குடை அல்லது பயணிகள் இருக்கைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.