ஆவணங்கள் சேதமடைய வாய்ப்பு

Update: 2022-08-10 14:05 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில், அந்த பகுதி மக்கள் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த அலுவலக கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுவர்களில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மழைக்காலங்களில் அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்து அங்குள்ள ஆவணங்கள், தளவாட பொருட்கள், பதிவேடுகள் அனைத்தும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழைய கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டி பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்