மரக்காணத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடம் உள்ளது. 70 ஆண்டுகள் பழமையான இந்தகட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயா்ந்து விழுகிறது. மழைக்காலங்களில் மழை நீர் கசிகிறது. எனவே ஆபத்தான இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.