ஆலங்குளம் ஊர் எல்கையின் அருகே பெட்ரோல் பங்கை கடந்து சென்றதும் சாலையில் அமைந்துள்ள வேகத்தடை மிகவும் உயரமாக அமைந்துள்ளது. அதன் மீது வர்ணம் எதுவும் பூசப்படாததால், வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே வேகத்தடையின் உயரத்தை சற்று குறைத்து, அதன் மீது வர்ணம் பூச வேண்டும். அருகே வேகத்தடை இருப்பதற்கான எச்சரிக்கை பலகையும் வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.