பராமரிப்பில்லாத பூங்கா

Update: 2022-08-10 12:02 GMT
பரங்கிப்பேட்டை தெசன் சாபு தெருவில் பாவா மரைக்கார் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் கிடக்கிறது.
அங்கிருந்த பல விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து, சிறுவர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனா். இந்த பூங்காவை சீரமைத்து பொது மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர பரங்கிப்பேட்டை பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதிமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

மேலும் செய்திகள்