சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளன. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் நடந்து செல்பவர்களையும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. எனவே இந்த பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ், ஜலகண்டாபுரம்.