ரேஷன்கடை அமைக்கப்படுமா?

Update: 2026-02-08 16:21 GMT
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தலிங்கமடம் ஊராட்சியில் இருளர் குடியிருப்பு பகுதியில் சுமார் 85 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு தனியாக ரேஷன் கடை இ்ல்லாததால் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து சித்தலிங்கமடத்திற்கு சென்று அங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய அல்லது பகுதி நேர ரேஷன்கடை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்