ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து காவாலகுடி, முடிகண்டநல்லூர், விழுப்பெருந்துறை வழியாக வீராணம் ஏரிக்கு வரும் வாய்க்கால் சுமார் 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு நீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி வாய்க்காலை விரைந்து தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?