சின்னசேலம் அடுத்த பூசப்பாடியில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மிக பெரிய ஊராக இருப்பதால் இந்த பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க சின்னசேலம் ஊராட்சியில் இருந்து பூசப்பாடியை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். மேலும் அதிக அளவு நிதி ஒதுக்கி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சரியான முறையில் செய்து கொடுக்க வேண்டும்.