திருவந்திபுரம் அடுத்த பேட்டை பஸ் நிறுத்தத்தில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் இருந்தது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்த செய்தி கடந்த வாரம் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் வேகத்தடையில் வர்ணம் பூசி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.