ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இரவு நேரங்களில் சரியான தூக்கம் இன்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.