திறக்கப்படாத நகர்ப்புற சுகாதார நிலையம்

Update: 2025-07-13 19:49 GMT

வாலாஜாவில் உள்ள சோளிங்கர் சாலையில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. கட்டி 6 மாதம் ஆகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கவில்லை. சுகாதார நிலையத்துக்குச் சுற்றுச்சுவர் கட்டாததால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. அந்தக் கட்டிடத்தின் முன், பின் பக்க தரைதளம் மேடு, பள்ளமாக உள்ளது. அதை சீர் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலு, வாலாஜா.

மேலும் செய்திகள்